அன்புடையீர், வணக்கம்

நாம் பேசுகிற, எழுதுகிற தமிழில் பிறமொழிச் சொற்கள் பல கலந்துள்ளன.

நாம் வேண்டுமென்றே பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில்லை.

நாம் வாழும் காலச்சூழல், ஆட்சிச்சூழல் போன்ற காரணங்களால் நம்மை அறியாமலேயே அவ்வாறு பேசுகிறோம்.

இக்கலப்பு மொழிவழக்கே காலப்போக்கில் நம் தாய்மொழியான தமிழின் அழிவுக்குக் காரணமாகிவிடும் என்பதை உணர்ந்து, நம் தமிழைத் தமிழாகப் பேசிட முன்னெடுக்க இந்த இணைய அகரமுதலி உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழைத் தமிழாகப் பேசுவது என்பது, நம்மொழியை இயல்பாக அதற்கேயுரிய உயர்நிலையில், தனிச்சிறப்புடன், செம்மைபிறழாது பேசுவதாகும்.

நாம் பேசுவது எம்மொழிச்சொல் ? ஆங்கிலமா? வடமொழியா? அரபியா, உருதா? போர்த்துக்கீசியமா? தெலுங்கா? என யாரிடம் கேட்பது?

மேலும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான சொற்களும் நம் தமிழில் வேண்டுமல்லவா ?

இதற்காகவே இந்த இணைய அகரமுதலி.

நல்ல தமிழ்ச் சொற்களை அறிவோம், உருவாக்குவோம், செம்மைப்படுத்துவோம், பேசிப் பழகுவோம்.

ஏனெனில் இவைதான் நம் தமிழரின் சொத்து, தமிழ்ச் சொத்து....

தமிழ்க்கனல், pollachinasan@gmail.com, 9788552061,