தமிழைத் தமிழாகப் பேசவேண்டும், அயற்சொற்களைக் கலந்து பேசுதல் தமிழ் மொழிக்கு அழகன்று.
தமிழ் உலகில் தோன்றி முதல் மொழி. பல்வேறு இலக்கணங்களும், அகரமுதலிகளும் பலநூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழ் மக்களால் இயற்றப்பட்டு, வழக்கில் இருந்துள்ளன. பல்வேறு சூழல்களால் 100 க்கு மேற்பட்ட மொழிகளின் சொற்கள் தமிழில் நுழைந்து - அச்சொற்களே தமிழ் - என்கிற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காகவே தொடக்க நிலைப் பயிற்சியாக இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டு இரண்டு குழுக்களுக்குப் பயிற்சியும் தரப்பட்டுள்ளன. நண்பர்களின் எண்ணத்திற்கேற்ப இந்தப் பயிற்சியில் வழங்கப்பட்ட கருத்துருக்களும், கூடுதல் கருத்துருக்களும், இதழ்களும், நூல்களும், இணைய பக்கமும் அனைவரும் இறக்கி அச்சாக்கி, அனைவருக்கும் பயன்படுத்த வேண்டும் என்கிற பெருவிருப்பில், இந்த இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
வலையேற்றிய நாள் : 15 - 5 - 2017 - மின்அஞ்சல் : pollachinasan@gmail.com, தொலைபேசி : 9788552061, காணொளிவழிப் பேச : skype : pollachinasan1951,